தனமல்வில தேசிய பாடசாலை மாணவி விவகாரம் : மேலும் 4 மாணவர்கள் கைது
மொனராகல-தனமல்வில தேசிய பாடசாலையின் 16 வயதுடைய பாடசாலை மாணவியை தகாத முறைக்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் நான்கு பேர் இன்று(15) லுணுகம்வெஹர பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 15 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் அவர்களில் மூவர் லுணுகம்வெஹர பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றின் மாணவர்களும் மற்றையவர் தனமல்வில தேசிய பாடசாலையைச் சேர்ந்த மாணவராவார்.
இரண்டு ஆசிரியைகள்
பாதிக்கப்பட்ட மாணவி தனமல்வில பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் லுனுகம்வெஹர பிரதேசத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது குறித்த சிறுமியை இவர்கள் தகாத முறைக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சம்பவம் தொடர்பில், பாடசாலை அதிபர், பிரதி அதிபர், பாடசாலையின் இரண்டு பெண் ஆசிரியர்கள், 17 பாடசாலை மாணவர்கள் மற்றும் 39 வயதுடைய பெண் ஒருவர் உட்பட 22 சந்தேகநபர்கள், இதுவரை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் அதிபர், பிரதி அதிபர் மற்றும் இரண்டு ஆசிரியைகள் பிணையில் அனுமதிப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |