திடீரென சுகயீனமடைந்துள்ள அனுபவம் மிக்க சுழியோடி திருமலை கடற்படை வைத்தியசாலையில்
கல்குடா டைவர்ஸ் அணியின் அனுபவம் மிக்க சுழியோடியான கபீர் முஹம்மத் தஸ்லீம் கடலில் மீட்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் திடீர் சுகவீனமுற்று திருகோணமலை கடற்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீரில் மூழ்கிய பல உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வரும் இவர் நேற்று (15.01.2023) உடல்நிலை குன்றிய நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

உயிர்களைக் காக்கும் பணி
அண்மையில் காயான்கேணி கடலில் மூழ்கிய தந்தை மகன் இருவரது உடல்களையும் தனியாக சுழியோடி மீட்டுக் கொடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தீவிர மீட்புப்பணியில் ஈடுபடுத்தி தனது உயிரையும் துச்சமென மத்தித்து பல உயிர்களைக் காக்கும் பணியில் இரவு பகலாக அயராதுழைத்து வந்த கபீர் முஹம்மத் தஸ்லீம் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைக்குப் பின்னர் உடல்நிலை தேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
ரூ. 4000 கோடி பட்ஜெட் இராமாயணம் படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் வாங்கும் சம்பளம்... இத்தனை கோடியா, அடேங்கப்பா... Cineulagam
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam