தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம்: புகைப்படமெடுத்த பொலிஸார்
யாழ். (Jaffna) தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.
குறித்த விகாரைக்கு அருகில் இன்று (24.05.2024) எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எழுப்பப்பட்ட கோசம்
இதன்போது, அவ்விடத்திற்கு வருகைத் தந்த பலாலி (Palali) பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை நோக்கி போராட்டக்காரர்கள் எதிர்ப்பு வெளியிடும் வகையில் பல்வேறு கோசங்களை எழுப்பினர்.
இந்நிலையில், குறித்த பொலிஸார் போராட்டக்காரர்களையும், ஊடகவியலாளர்களையும் கைத்தொலைபேசியில் புகைப்படம் எடுத்துள்ளனர்.
மேலும், அவர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் செயற்பட்டுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தின் புதிய சட்டமுன்வரைவு குறித்து வழக்கு தாக்கல்: தேசிய மக்கள் சக்தி எடுத்துள்ள தீர்மானம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |