தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் தையிட்டி போராட்டத்தில் பங்குகொள்ள வேண்டும்: அழைப்புவிடுத்த சுகாஷ்
தையிட்டியில் மூன்றாம் கட்டமாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் தமிழராகிய நாம் எமது எதிர்ப்பை வலுவாகவும் காத்திரமாகவும் வெளிக்காட்டவேண்டிய தேவை இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(02.06.2023) போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
நாளையதினம் பொசன் போயா தினம் என்பதால் அத்தனை தமிழ்த் தேசியப் பற்றாளர்களும் நாளை காலை 9:00 மணிக்கு தையட்டி சட்ட விரோத கட்டுமானம் அமைந்திருக்கின்ற பகுதி விரைந்து வருமாறு நாங்கள் அறைகூவல் விடுக்கின்றோம்.
இது எங்களது சொந்த பூர்வீக மண், எமது போராட்டமானது ஒரு சட்ட ரீதியான போராட்டம். இங்கு அமைக்கப்பட்டு இருக்கின்ற கட்டுமானம்தான் சட்டத்திற்கு புறம்பானதே தவிர எமது போராட்டம் சட்டவிரோதமானது கிடையாது.
வரலாற்று கடமை
ஆகவே இந்த சட்ட ரீதியான போராட்டத்தை வலுப்படுத்துவது ஒவ்வொரு தமிழ் தேசிய பற்றாளர்களினதும் வரலாற்று கடமையாகும்.
இந்தப் போராட்டத்தை நாங்கள் தவிர்ப்போமானால் எங்களது மண் பறிபோவதற்கு நாங்களே காரணமாகி விடுவோம். நாங்கள் தெரிந்தும் அந்த தவறை செய்யக்கூடாது.
இன்று இந்த போராட்டத்தை தவிர்ப்போமேயானால் அம்பாறைக்கு ஏற்பட்டுள்ள நிலைமை, திருகோணமலைக்கு ஏற்பட்டுள்ள நிலைமை நாளை ஏனைய பகுதிகளுக்கும் ஏற்பட்டுவிடும்.
எனவே நாங்கள் இதனை அனுமதிக்க கூடாது, அனுமதிக்கவும் முடியாது. தமிழர் தாயகம் எங்கும் எமது மண்ணுக்காக, உரிமைக்காக போராட்டம் செய்ய வேண்டியது தமிழ் மக்களுடைய கடமையாகும் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
