இலங்கை வந்த தாய்லாந்து துணைப் பிரதமர்! கைச்சாத்திடப்படவுள்ள விசா விலக்கு ஒப்பந்தம்
தாய்லாந்தின் துணைப் பிரதமரும், வெளிவிவகார அமைச்சருமான சிஹசக் புவாங்கெட்கியோ இலங்கை வந்துள்ளார்.
அவர் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்றைய தினம் (20.11.2026) பிற்பகல் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தம்

அத்துடன், சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான தாய்லாந்து விசா அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளும் தேவையிலிருந்து விலக்களிப்பது தொடர்பான ஒப்பந்தத்திலும் இந்த விஜயத்தின் போது தாய்லாந்து துணைப் பிரதமர் கைச்சாத்திடவுள்ளார் எனவும் தெரியவருகிறது.
மேலும், கண்டி அஸ்கிரிய மஹா விகாரையில் இன்று நடைபெறவுள்ள கதினப் பூஜை நிகழ்விலும் அவர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.