கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பெண் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 5 கிலோ எடையுள்ள ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது மீட்கப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் மதிப்பு சுமார் 100 மில்லியன் ரூபாயாகும்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 33 வயதான தாய்லாந்து பெண் எனவும் அவர் இன்று அதிகாலை மலேசியாவில் இருந்து இலங்கை வந்துள்ளார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெண் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரின் பயணப் பொதிகளில் உணவுப் பொதிகளில் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இலங்கை சுங்கப் பிரிவினரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் இணைந்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri

மேற்கு லண்டன் பகுதியில் பரபரப்பு: புகலிடக் கோரிக்கையாளர்கள் விடுதியில் முகமூடி நபர்கள் போராட்டம்! News Lankasri
