சுவிற்சர்லாந்தில் இடம்பெறவுள்ள மாபெரும் தைப்பொங்கல் விழா
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையும் தமிழ்ச்சங்கமும் இணைந்து நடாத்தும் மாபெரும் தைப்பொங்கல் விழா 17.01.2026 சனிக்கிழமை பாசல் மாநிலத்தில் முற்றென்ஸ் நகரில் நடைபெறவுள்ளது.
லங்காசிறி, தமிழ்வின், ஐபிசிதமிழின் பிரதான ஊடக அனுசரணையுடன் காலை 9:00 மணிக்கு பொங்கல் பொங்கும் நிகழ்வுடன் தொடங்கும் இந்தவிழாவில் தமிழர் பண்பாடு சார்ந்த இயல், இசை, நடன நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன.
கருத்தாடல் நிகழ்வு
இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் சபேசன் சிதம்பரநாதன் வருகை தந்து சிறப்புரை ஆற்றவுள்ளார்.

மேலும், அவர் தலைமையில் இளையோர் கலந்துகொள்ளும் கருத்தாடல் நிகழ்வும் அரங்கில் இடம்பெறுகிறது.
இந்த கருத்தாடல் நிகழ்வானது இளையோர் முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் நிகழ்வாக அமையும். இவ்விழாவில் உள்ளூர் அரசியலாளர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
பரிசளிப்பு நிகழ்வு
தமிழ்க்கல்விச்சேவையின் 2025 ஆம் ஆண்டுக்கான ஓவியப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் தைத்திருநாளையொட்டி நடாத்தப்பெற்ற போட்டிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வும் நடைபெறும்.

தமிழர் பண்பாட்டுச் சிறப்பைப் பேணி, இளையோருக்கும் பிற இனத்தவர்களுக்கும் அறிமுகம் செய்வதுடன், தை மாதத்தை தமிழர் மரபுரிமை மாதமாகச் சுவிற்சர்லாந்தில் அறிவிப்பதற்கு ஏற்ற ஏதுநிலைகளை உருவாக்குவதனையும் முதன்மை நோக்கங்களாகக்கொண்டு நடாத்தப்பெறும் இந்தநிகழ்வுக்கு அனைவரையும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 11 நிமிடங்கள் முன்
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri