பிளவுகளைக் கடந்து அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறுவோம்! தைப்பொங்கல் விழா நிகழ்வில் சஜித்
அறுவடைக்கு உதவும் சூரியனுக்கு, விவசாயிகளுக்கு, பசுக்களுக்கு நன்றி செலுத்தும் தைபொங்கல் பண்டிகையில் நாம் அனைவரும் ஒன்றுபடுவதை காண்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று(15) நடைபெற்ற தைப்பொங்கல் விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்து மக்கள்
அவர் மேலும் உரையாற்றுகையில்,
உலகெங்கும் வாழும் இந்து மக்கள் தங்கள் அறுவடைக்கு பங்களிக்கும் சூரியன், விவசாயிகள் மற்றும் பசுக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தைப்பொங்கலைக் கொண்டாடுகின்றனர்.

இது இயற்கையோடு இணைந்த பண்பாட்டையும் பிரதிபலிப்பதாக அமைகின்றது. தைப்பொங்கல் பண்டிகை மக்களின் நன்றியுணர்வு கலாசாரத்தை வளர்க்கும் நம்பிக்கையை ஊக்குவிப்பதோடு, அமைதி, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்துகின்றது
"தன்னிந்தியாவை மையமாகக் கொண்டு தொடங்கிய இந்தப் தைப்பொங்கல் பண்டிகை, சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துவதன் மூலம் கனமழை பொழிந்து மனித வாழ்விற்கு எண்ணற்ற நன்மைகளைப் பெற்றுத் தரும் என்று மக்கள் நம்புகின்றார்கள்.
துயர் சம்பங்கள்
சீரான அறுவடையைப் போல சீரான தொடக்கமும் இதன் மூலம் நிகழ்கின்றது. சூரிய தெய்வத்துக்காக வணங்கி வழிபடுதல், விவசாயத்துக்கு உதவும் அனைத்து செயல்களையும், பசு வளத்தின் மதிப்பைப் பாராட்டுதலும் விவசாயிகளுக்கு நன்றி செலுத்துதலும் இந்தப் பண்டிகை மூலம் எடுத்தியம்பப்படுகின்றது. இதுவே செழிப்பு, வளம், ஒற்றுமை, நட்பு மற்றும் அனைவருக்கும் சௌபாக்கியத்தைக் கொண்டு வருகின்றது.
நமது நாடு கடந்த காலங்களில் நான்கு பெரும் துயர் சம்பங்களை எதிர்கொண்டது.

இதனால் மக்களின் வாழ்க்கை நிலைகுலைந்து போயுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நடைமுறை ரீதியிலான சகல நடவடிக்கைகளையும் எடுக்க நாம் தயார். செழிப்பு, வளங்கள், நன்மைகள், செல்வம் மற்றும் வருமானம் ஆகியவற்றின் விடியல் சமமாகப் பகிரப்படும் கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கு எதிர்பார்க்கின்றோம்.
இன, மத வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல், ஒரு நாடாக அமைதி, ஒற்றுமை, நட்புறவின் மூலம் பொதுவான இலக்கை நோக்கிச் செல்வதை நாம் இலக்காகக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.



