நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தைப்பொங்கல் விழா
உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் உழவர் திருநாளான தமிழ் தைத்திருநாளினை இன்று (15.01.2024) கொண்டாடி வருகின்றனர்.
இந்த திருநாளினையொட்டி நாடெங்கிலும் உள்ள ஆலயங்களில் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.
யாழ்ப்பாணம்
இந்நிலையில், வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தைப்பொங்கல் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
மேலும், யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தைப்பொங்கல் சிறப்பு பூசைகள் இன்றைய தினம் சிறப்பாக ஆலய பிரதம குரு கணபதீசுவரக் குருக்கள் கணேஸ்வரக்குருக்கள் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
அத்தோடு, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிதிகளுடன் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவும் பங்கேற்றதுடன், கலாசார நடன நிகழ்வுகளும் பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்றது.
செயதி: தீபன் ,கஜிந்தன்
கிளிநொச்சி
கிளிநொச்சியிலுள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்திலும், தேவாலயங்கள் மற்றும் வீடுகளிலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
செய்தி : எரிமலை
மன்னார்
தலைமன்னார் மேற்கு புனித லோறன்சியார் ஆலயத்திலும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
செய்தி : ஆஷிக்
நயினாதீவு
தைத்திருநாளினை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் பொங்கல் உற்சவம் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
செய்தி : கஜிந்தன்
நுவரெலியா
நுவரெலியா மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலங்களில் ஒன்றான ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் சூரிய பொங்கல் வைத்து பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளது.
இந்து மக்களின் தலையாய கடமைகளில் ஒன்றான நன்றி மறவாமை நினைவு கூர்ந்து கொண்டாடப்படும் தைப்பொங்கல் தொன்று பாரம்பரியமாக கடைபிடித்து வரும் ஒன்றாகும்.
மனிதனின் வாழ்வாதாரத்திற்கும் விவசாயத்திற்கும் உதவிய சூரிய பகவான் முதல் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிப்பது இந்த தைப்பொங்களின் அடிப்படை தத்துவமாவதுடன் தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் இன்று மலையகம் எங்கும் பொங்கல் பொங்கி பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதும் குறிப்பிடத்தக்கதாகும். இதனையொட்டி வீடுகளிலும் சூரிய பொங்கல் பொங்கி வழிபாடுகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தி : மலைவஞ்யன்
புத்தளம்
தைப்பொங்கல் விசேட பூஜை புத்தளம் ஸ்ரீ சித்திவிநாயகர் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயங்களிலும் முன்னெடுக்கப்பட்டன.
இந்த நிலையில் புத்தளம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் தைப்பொங்கல் விசேட பூஜை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ வெங்கட சுந்தரராம குருக்களின் தலைமையிலும் புத்தளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ அம்பலவானன் குருக்கள் தலைமையிலும் இடம்பெற்றுள்ளது.
செய்தி : அஸார்
மட்டக்களப்பு
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைத்திருநாளை முன்னிட்டு விசேட பொங்கல் நிகழ்வும் பூஜையும் நடைபெற்றது.
ஆலயத்தில் மாமாங்கேஸ்வரருக்கு விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்று ஆலய முன்றலில் பொங்கல் பொங்கப்பட்டு சூரிய பகவானுக்கு விசேட பூஜைகள் நடாத்தப்பட்டன. அதனை தொடர்ந்து ஆலயத்தில் மாமாங்கேஸ்வரருக்கு விசேட பூஜைகளும் நடைபெற்றன.
மேலும், மட்டக்களப்பு ஆணைப்பந்தி ஸ்ரீ சித்தி
விக்னேஸ்வரர் ஆலயத்திலும் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ கணேசரிவிஷாந்த குருக்கள்
தலைமையில் பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
செய்தி : குமார்
திருகோணமலை
திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று சிவன் ஆலயம் தொல்பொருள் திணைக்களத்துக்குரியது என நீதிமன்றில் வழக்குகள் இடம் பெற்று வந்த போதும் சிவில் சமூக அமைப்புக்களின் வேண்டுகோளின் படி பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் பூசை வழிபாடுகள் இடம் பெற்றது.
செய்தி : பதுர்தீன் சியானா
வவுனியாவில் பொலிஸ் நிலையம்
வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தில் பகத்திப் பாடல்கள் இசைக்க தைப்பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது.
வவுனியா பொலிஸ் நிலைய சமுதாயப் பொலிஸ் குழுவின் ஏற்பாட்டில் சிவில் பாதுகாப்பு குழுவினரின் பங்களிப்புடன் சிறப்பான முறையில் புதுப்பானையில் புத்தரிசிப் பொங்கல் இடம்பெற்றது.
இவ் பொங்கல் நிகழ்வில் பொலிஸ் உயர் அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள்
மற்றும் வவுனியா நகர் பிரதேசங்களை சேர்ந்த சமுதாய பொலிஸ் பிரிவின்
உறுப்பினர்கள், வர்த்தகர்கள், கிராம சேவையாளர்கள் என பலரும் கலந்து
கொண்டிருந்தனர்.
திருகோணமலை பொரலுகந்த ரஜமஹா விகாரை
தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தும் விதத்தில் திருகோணமலை பொரலுகந்த ரஜமஹா விகாரையில் தைப்பொங்கல் நிகழ்வு இன்று (15) இடம் பெற்றுள்ளது.
திருகோணமலை நிலாவெளி வீதியிலுள்ள பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள பொரலுகந்த
ரஜமஹா விகாரையின் விகாராதிபதி
சுகிதவங்ச திஸ்ஸ தேரர் இன ஒற்றுமையை வலுவூட்டும் விதத்தில் விகாரைக்கு
அருகில் உள்ள வீடுகளுக்கு சென்று பொங்கல் நிகழ்விலும் கலந்து கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
