அமெரிக்காவில் பணய கைதிகளை தடுத்து வைத்தவர் இங்கிலாந்து நாட்டவர்! மேலும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க டெக்சாஸில் உள்ள ஜெப ஆலயத்தில் கடந்த சனிக்கிழமையன்று பணயக்கைதிகளாக நால்வர் தடுத்து வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இங்கிலாந்தில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பணயக்கைதிகளை தடுத்து வைத்த சம்பவத்தின்போது இங்கிலாந்தின் குடிமகனான 44 வயதான மாலிக் பைசல் அக்ரம், காவல்துறையினருடன் இடம்பெற்ற மோதலின்போது கொல்லப்பட்டார்.
இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தெற்கு இங்கிலாந்தின் மென்செஸ்டரில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
எனினும் அவர்களின் விபரங்கள் வெளியிடப்படவில்லை. அமெரிக்க காவல்துறை தகவல்களின்படி, அக்ரம் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நியூயார்க்கின் ஜேஎஃப்கே சர்வதேச விமான நிலையம் வழியாகவே அமெரிக்காவை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அக்ரமின் சகோதரர் குல்பர் பிளாக்பர்ன் முஸ்லிம் சமூகத்தின் முகநூல் பக்கத்தில் ஒரு அறிக்கையில், தமது சகோதரரின் மரணத்தை உறுதிப்படுத்தினார்.
அவர் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டதுடன், தனது சகோதரர் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
இதேவேளை அக்ரமினால் பணயக்கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நால்வரும் காயமின்றி சில மணித்தியாலங்களில் விடுவிக்கப்பட்டனர்.



பாரிஸ் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த ட்ரம்ப் - கிரீன்லாந்து விவகாரம் மீதான சர்ச்சை தீவிரம் News Lankasri
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam