அமெரிக்காவில் பதிவாகியுள்ள கொடூர சம்பவம்: துரிதமாக செயல்பட வேண்டிய நேரம் இது என்கிறார் ஜோ பைடன்
ஆயுதக் கட்டுப்பாடு குறித்து எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் இதுவரை அமெரிக்காவில் எடுக்கப்படவில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலையில் இளைஞர் ஒருவர் நேற்று நடத்திய துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் ஜப்பானிற்கான விஜயத்தை முடித்துக் கொண்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று அமெரிக்கா திரும்பியுள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த அசம்பாவிதம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் அவர் உரையாற்றுகையில்,
டெக்சாஸ் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு மிகவும் கொடூரமான ஒன்று. இதுபோன்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் மற்ற உலக நாடுகளில் மிகவும் அரிதாக நடைபெறுகின்றன
ஆனால், அமெரிக்காவில் இது அன்றாட நிகழ்வாக மாறிவிட்டது. இதற்கு என்ன காரணம்? ஆயுதக் கட்டுப்பாடு குறித்து நாம் வெறுமென பேசிதான் வருகிறோம்.

எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் இதுவரை அமெரிக்காவில் எடுக்கப்படவில்லை. துப்பாக்கி கலாச்சாரத்துக்கு என்று நாம் முற்றுப்புள்ளி வைக்க போகிறோம்?
எத்தனை காலத்திற்குதான் இந்த அவலத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க போகிறோம்? நான் மிகுந்த விரக்தியில் இருக்கிறேன். நாம் துரிதமாக செயல்பட வேண்டிய நேரம் இது என குறிப்பிட்டுள்ளார்.
| அமெரிக்காவில் பாலர் பாடசாலையில் துப்பாக்கி சூடு - பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு |
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 18 மணி நேரம் முன்
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
இனிமே இப்படித்தான்.. அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்! Cineulagam