சிறுமி ஹிசாலினி விவகாரம்! பல நாட்களின் பின்னர் சிக்கியுள்ள முக்கிய ஆதாரங்கள்
முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயரிழந்த சிறுமி ஹிசாலினியின் மரணம் தொடர்பில் தற்போது சில சாட்சியங்கள் கிடைத்துள்ளன.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவரான பேராசிரியர் முதித்த விதான பத்திரண உள்ளிட்ட அதிகாரிகள், இன்று முதன்முறையாக, ரிசாட் பதியுதீனின் வீட்டுக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்கள், நாளைய தினம் நீதிமன்றில் முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் மண்ணெண்ணெய் போத்தல் ஒன்றும், லைட்டர் ஒன்றும், எரிந்த நிலையில் மீட்கப்பட்ட ஒரு சோடி பாதணி என்பன தொடர்பில், காவல்துறை விசாரணையில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
சிறுமி தீக்காயங்களுக்கு உள்ளாகி, சுமார் 20 நாட்கள் கடந்துள்ள நிலையில் இந்த சாட்சியங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan