புதிய பயங்கரவாத சட்டமூலம் நிறைவேறினால் அப்பாவிகளும் கைது செய்யப்படலாம்: கே.வி.தவராசா

Dr Wijeyadasa Rajapakshe Ranil Wickremesinghe Sri Lanka Prevention of Terrorism Act
By Kajinthan May 07, 2023 10:25 PM GMT
Report

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் மூலம் நிறைவேற்றப்பட்டால் பேசினாலும்,பேசாமல் இருந்தாலும் கைது செய்யப்படலாம் என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவித்துள்ளார்.

யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற உழைக்கும் மகளிர் அமைப்பின் மகளிர் தின நிகழ்வில் (06.05.2023) ஆம் திகதி பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுதந்திரத்தை பறிக்கும் சட்டம் 

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் ஒரு மனிதன் நடமாடும் சுதந்திரத்தை பறிப்பதாக அமைவதோடு ஊடகங்களை அடக்குவதாக அமைகின்றது.

மேலே குறிப்பிட்டவை போன்று ஒருவர் பேசினாலும் கைது செய்யப்படலாம் பேசாமல் இருந்தாலும் கைது செய்யப்படலாம் என்பதற்கு உதாரணம் ஒன்றை கூறுகிறேன்.

புதிய பயங்கரவாத சட்டமூலம் நிறைவேறினால் அப்பாவிகளும் கைது செய்யப்படலாம்: கே.வி.தவராசா | Terrorism Act If Implemented Innocents Will Arrest

ஒருவர் பொது வெளியில் பேசிய விடயங்களை அரசுக்கு எதிரானது என கூறி அவரை கைது செய்ய முடியும். அவ்வாறு ஒருவர் பேசியதை கேட்டுக் கொண்டிருந்தவரை அரசுக்கு எதிராக தூண்டப்படுகிறார் எனக் கூறி அவரையும் கைது செய்ய முடியும்.

இதனை ஊடகங்கள் ஒருவர் கூறிய விடயத்தை அச்சு ஊடகங்களில் எழுதுவதோ இலத்திரனியல் ஊடகங்களில் பதிவிடுவதோ அல்லது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதை அரசுக்கு எதிரான செயற்பாடு என கூறி கைது செய்ய முடியும்.

குறிப்பிடப்படாத வரையறைகள்

ஏனெனில் பயங்கரவாதம் என்பதற்கு சரியான விளக்கங்களோ அல்லது வரையறைகள் இதுவரை குறிப்பிடப்படவில்லை. அரகலை போராட்டத்திற்கு பின்னர் இனியொரு வலுவான போராட்டம் இடம்பெறுவதை தடுக்கும் முகமாக புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

தற்போது உள்ள பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவரை 18 மாதங்கள் தடுத்து வைத்திருக்க முடிவதோடு பிணை வழங்க வேண்டுமாயின் சட்டமா அதிபரிடம் அனுமதி பெறப்பட வேண்டும்.

புதிய பயங்கரவாத சட்டமூலம் நிறைவேறினால் அப்பாவிகளும் கைது செய்யப்படலாம்: கே.வி.தவராசா | Terrorism Act If Implemented Innocents Will Arrest

ஆனால் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் மூன்று மாதங்கள் தடுத்து வைக்கப்படுவதோடு நீதவான் நீதிமன்றத்தால் பிணை வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

18 மாதங்களாக தடுத்து வைக்கப்படுவதை மூன்று மாதங்களாக புதிய சட்டமூலத்தில் கூறப்பட்டாலும் வழக்கு தாக்கல் தொடர்பில் சுமார் 20 வருடங்கள் வரை சட்டமா அதிபர் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யாமலே இழுத்தடிக்க முடியும்.

மூன்று மாத தடுப்பு காவல்

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தில் கைது செய்யப்படும் நபர் ஒருவர் அந்தப் பிரதேசத்தின் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரின் ஒப்புதலுடன் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லாமல் மூன்று மாத தடுப்பு காவலில் வைத்திருக்க முடியும்.

மேலும் நீதிமன்றத்துக்கு உரிய அதிகாரங்கள் சில ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கு உட்பட்டதாக புதிய சட்டமூலத்தில் வெளி வர உள்ளது.

அதாவது நாட்டுக்குள் செயல்படும் தனி நபர்களை அல்லது குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கும் நிதிகளை முடக்குவதற்கும் உத்தரவிடும் அதிகாரம் நீதிமன்றங்களில் இருந்து நிறைவேற்று ஜனாதிபதியின் கைகளுக்கு செல்கிறது.

இவ்வாறான நிலையில் நாட்டினுடைய நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச யார் என்ன சொன்னாலும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நிறைவேற்றுவோம் எனக் கூறுகிறார்.

புதிய பயங்கரவாத சட்டமூலம் நிறைவேறினால் அப்பாவிகளும் கைது செய்யப்படலாம்: கே.வி.தவராசா | Terrorism Act If Implemented Innocents Will Arrest

அவரின் கருத்தை பார்க்கும் போது நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க பயங்கரவாதச் சட்டத்தை முற்றாக நீக்குவேன் என சர்வதேசத்திடம் வாக்குறுதி அளித்த நிலையில் தற்போது புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைபை தயாரித்தவர்களில் ஒருவரான நீதி அமைச்சர் விஜயதாச நிறைவேற்றுவேன் எனக் கூறும் போது ஜனாதிபதி மௌனமாகவே உள்ளார்.

இவர்களுக்கு ஆட்சி அதிகாரம் தொடர்ச்சியாக தங்களிடமே இருக்க வேண்டும் என்பதில் கவனமாக உள்ள நிலையில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் நிறைவேறுகிறதோ இல்லையோ தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத சட்டத்தை தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்ற மனோநிலையில் உள்ளனர்.

ஆகவே பல்வேறு ஆபத்துக்கள் நிறைந்த புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை தோற்கடிப்பதற்கு தென் இலங்கை மக்களும் தயாராக உள்ள நிலையில் சிறுபான்மை மக்களும் அதற்கு ஆதரவாக செயல்படுவதே காலத்தின் கட்டாயம் என தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US