ஹொரணையில் கோர விபத்து! தூக்கி வீசப்பட்ட சாரதிகள்
ஹொரணை - வாகவத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி மீது எதிர் திசையில் இருந்து வந்த கார் மோதியதில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதியும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு விழுந்தமை அருகில் உள்ள சிசிரிவி கருவியில் பதிவாகியுள்ளது.
பொலிஸ் விசாரணை
இந்நிலையில் விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், விபத்தில் காயமடைந்த காரின் ஓட்டுநர் ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
