மன்னார் நகர சபையில் கடும் பதற்றம்!சபையின் தவிசாளருக்கும் உறுப்பினர்களுக்குமிடையே முரண்பாடு
மன்னார் நகர சபையின் மூன்றாவது அமர்வு இன்றைய தினம் (27) காலை 10 மணியளவில் நகர சபையின் தலைவர் டானியல் வசந்தன் தலைமையில் ஆரம்பமானது.
இதன் போது, முதலில் ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் சபை அமர்வு ஆரம்பமானது.
கடந்த மாத கூட்டறிக்கை ஏற்கனவே உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில்,குறித்த கூட்டறிக்கையை சபையில் வாசிக்காது அதனை ஆதரித்து முன் மொழிந்து வழி மொழியுமாறு தவிசாளர் சபையில் தெரிவித்தார்.
முரண்பாடு
இதனால் சபையில் நீண்ட நேரம் சர்ச்சை ஏற்பட்டதோடு,குறித்த கூட்டறிக்கையை சபையில் வாசித்து சரி பிழை பார்க்காமல் முன்மொழிய முடியாது என உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
மேலும் குறித்த அறிக்கையில் பல்வேறு பிழைகள் மற்றும் திருத்தங்கள் காணப்படுவதாகவும் எனவே குறித்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
தொடர்ச்சியாக உறுப்பினர்கள் திருத்தங்களோடு,சபையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.
இதனால் சபை அமர்வை தொடர்ச்சியாக நடத்திச் செல்ல முடியாத நிலை தவிசாளருக்கு ஏற்பட்டது.
ஒத்திவைப்பு
இந்த நிலையில் கடந்த மாத கூட்டறிக்கை திருத்தங்களுடன் சமர்ப்பிக்கும் வகையில் இன்றைய தினம் இடம்பெற்ற 3 ஆவது சபை அமர்வு நாளை (28) வியாழன் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம்(28) காலை 9 மணிக்கு நகர சபையின் தவிசாளர் தலைமையில் மீண்டும் சபை அமர்வு இடம்பெற உள்ளது.
மன்னார் நகர சபையின் கடந்த இரு அமர்வுகளும் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் ,எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri
