கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பமான நிலைமை
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஊழியர்கள் மேற்கொண்ட பணி பகிஷ்கரிப்பு காரணமாக குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது.
தமது சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி, இன்றைய மதிய உணவு நேரத்தில் விமான நிலைய வருகை முனையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நாம் எந்தவொரு அரசியல் பின்னணியும் இன்றி உருவாக்கப்பட்டுள்ள விமான நிலைய கூட்டு தொழிற்சங்கம் என, அதன் தலைவர் தம்மிக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சம்பள உயர்வு
கடந்த ஆறு வருடங்களாக விமான நிலைய ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கவில்லை. “எனவே, எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் சம்பள உயர்வு குறித்து எழுத்துப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால் அடுத்தாண்டு ஜனவரி 03 ஆம் திகதி முதல் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடத் தயாராக உள்ளோம் என அவர் எச்சரித்துள்ளார்.
இன்று குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களையே இந்த போராட்டத்திற்கு அழைத்துள்ளோம். விமான நிலையத்தின் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்கள் இந்த நிகழ்வுக்கு அழைக்கப்படவில்லை என்றும் தலைவர் மேலும் தெரிவித்தார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
