ரஷ்ய குண்டு வீச்சு விமானங்கள் இடைமறிப்பு - அமெரிக்க போர் விமானங்களின் செயலால் பதற்றம்
ரஷ்ய குண்டுவீச்சு விமானங்களை இரண்டு அமெரிக்க போர் விமானங்கள் அலாஸ்கா அருகில் இடைமறித்தாக வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்புக் கட்டளை (NORAD) தெரிவித்துள்ளது.
அலாஸ்காவிற்கு அருகில் பறந்த Tu-95 Bear-H ரஷ்ய குண்டுவீச்சு விமானங்கள் திங்களன்று அலாஸ்கன் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்குள் நுழைந்ததை அடுத்து அவை இடைமறிக்கப்பட்டதாக NORAD செவ்வாயன்று தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
ரஷ்ய நடவடிக்கையை அச்சுறுத்தலாக பார்க்கவில்லை
மேலும் அதில் ரஷ்ய குண்டுவீச்சு விமானங்களை இடைமறிக்க இரண்டு அமெரிக்க F-16 போர் விமானங்கள் அனுப்பப்பட்டதாக வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்புக் கட்டளை (NORAD) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக NORAD வழங்கியுள்ள விளக்கத்தில்,
ரஷ்ய குண்டு வீச்சு விமானம் அமெரிக்க அல்லது கனேடிய இறையாண்மை வான்வெளிக்குள் நுழையாவிட்டாலும், அவை அலாஸ்கன் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்குள் (ADIZ) காணப்பட்டதால், அதனை கண்டறிந்து கண்காணித்து, இடைமறித்தாக தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் கனடாவின் கூட்டு வான் பாதுகாப்பு அமைப்பான NORAD, ரஷ்ய நடவடிக்கை அச்சுறுத்தலாக பார்க்கப்படவில்லை, அல்லது ஆத்திரமூட்டும் செயலாக பார்க்கப்படவில்லை" என்று குறிப்பிட்டுள்ளது.