ஐயோ தயாசிறி..! பிமலின் தொனியால் சிரித்த ஆளும் கட்சி - சபையில் குழப்பமடைந்த எதிர்க்கட்சியினர்
நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வின்போது, எதிர்க்கட்சியினர் மற்றும் சபை முதல் பிமல் ரத்நாயக்க ஆகியோருக்கு இடையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
இதனால், சபையில் கடும் குழப்ப நிலை ஏற்பட்டது.
சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க உரையாற்ற ஆரம்பிக்கும் பொழுது நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஒழுங்குப் பிரச்சினை ஒன்றினை எழுப்பியிருந்தார்.
ஐயோ தயாசிறி..
எனினும், அவரது ஒழுங்குப் பிரச்சினை மறுக்கப்பட்ட நிலையில், சபையில் கடும் கூச்சல் எழுந்ததுடன் குழப்ப நிலை ஏற்பட்டது.
நிலையியற் கட்டளைகளின் 29(2) பிரிவின்படி சிறப்புரிமை பிரச்சினை நிராகரிக்கப்பட்டதாக சபாநாயகர் கூறினார். இதன் காரணமாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் பலர் சபையில் கடுமையாக கூச்சலிட்டனர்.
மேலும், சபை முதல்வர் பிமல் ரத்நாயக்கவிற்கு உரையாற்றுவதற்கான சந்தர்ப்பத்தையும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் வழங்கவில்லை.
இதனையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்பில் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

தயாசிறி ஜயசேகர தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்திருந்த பிமல் ரத்நாயக்க, அவரைப் பார்த்து “ஐயோ தயாசிறி.., ஐயோ தயாசிறி.., ஐயோ தயாசிறி” என்று கேலிக் குரலில் குறிப்பிட்ட போது ஆளும் தரப்பில் இருந்து கடும் நகையொலி எழுப்பப்பட்டது.
அத்துடன், தனக்குரிய நேரத்தில் தன்னை பேசவிடாது எதிர்க்கட்சியின் குழப்பம் விளைவித்ததால் விரயமான நிமிடங்களை எதிர்க்கட்சியினருக்கு உரையாற்ற வழங்கப்பட்ட நேரத்துடன் இணைத்துக் கொள்ளுமாறும் பிமல் ரத்நாயக்க சபாநாயகரிடம் கோரிக்கை முன்வைத்திருந்தார்.