தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் குருந்தூர் மலைக்கு திடீர் விஜயம்(Video)
குருந்தூர் மலையில் தற்பொழுது வேலைப்பாடுகள் நடைபெறுவதாக கிடைத்த தகவல்களையடுத்து திடீர் விஜயமொன்றினை, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.
முற்றுமுழுதான ராணுவப் பிரசன்னத்துடன் குருந்தூர் மலையின் கீழ்ப்பகுதியும் மேற்பகுதியும் காணப்பட்டதுடன், குருந்தூர் மலையின் கீழ் பகுதியில் ஏராளமான சுண்ணாம்பு பக்கற்றுக்களும், நூற்றுக்கு மேற்பட்டவர்கள் தங்குவதற்கான கட்டில்களும், தீயில் சுடப்பட்டுக்கொண்டிருக்கின்ற குளத்துமீன்களும், ஏற்கனவே வத்தலாக்கப்பட்ட கருவாடுகளும் காணப்பட்டுள்ளது.
கட்டுமானத்திற்கான தடயங்கள்
மேலும் கட்டுமானத்திற்கான வாளி போன்ற தடயங்கள் மேற்பகுதியில் காணப்பட்டது.
இதேவேளை அங்கு சீருடையில் நின்ற இராணுவத்தினர் பலர் காட்டுக்குள் தம்மை மறைத்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்ணிமுறிப்பு குளத்திற்குள் ராணுவத்தை தவிர வேறு யாரும் மீன்பிடிக்கவோ
குளத்திற்குள் பிரவேசிக்கவோ முடியாத நிலையில் பெருவாரியான மீனினைப் பிடித்து
கருவாடாக்கி தென்பகுதிக்கு கொண்டு செல்லுகின்ற செயற்பாடுகளும் ராணுவத்தால்
மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri
பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam