இந்திய ஜம்மு - காஸ்மீரில் பதற்றம் : பொலிஸ் நிலையத்துக்குள் இராணுவம் புகுந்து தாக்குதல்
இந்தியாவில் ஜம்மு- காஸ்மீரில்(Jammu and Kashmir)இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த மோதலில் மூன்று பொலிஸார் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் சம்பவம் தொடர்பில் மூன்று லெப்டின்ட் கேர்னல் தர அதிகாரிகள் உட்பட்ட 16 இராணுவத்தினர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொலிஸார் சோதனை
முன்னதாக ஜம்மு-காஸ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் வழக்கு ஒன்று தொடர்பில் இராணுவ உறுப்பினர் ஒருவரின் வீட்டில் பொலிஸார் சோதனை நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து குறித்த பொலிஸ் நிலையத்துக்கு சென்று இராணுவத்தினர், அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், பொலிஸார் மீது தாக்குதல்களையும் மேற்கொண்டுள்ளனர்.
எனினும் வாக்குவாதம் இடம்பெற்றபோதும் மோதல்கள் இடம்பெறவில்லை என்று இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |