ஏடன் வளைகுடாவில் அதிகரிக்கும் பதற்றம்
அரபிக்கடலின்(Arabian Sea) ஏடன் வளைகுடா பகுதியில் ஏமனின் நிஷ்டன் கடற்பகுதியில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று(09) ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தாக்குதலினால் சரக்கு கப்பலுக்கும் கப்பலில் இருந்த மாலுமிகள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
இதன்போது ஏவுகணை கப்பலுக்கு மிக அருகே கடலில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளை, சரக்கு கப்பல் எந்த நாட்டை சேர்ந்தது. கப்பலில் எத்தனை மாலுமிகள் பயணித்தனர் போன்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை.

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி சிறைபிடிக்கும் செயலிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 23 மணி நேரம் முன்
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam