சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன் ஏற்பட்ட குழப்பம்! வைத்தியர் அர்ச்சுனா அம்பலப்படுத்தும் உண்மைகள்
புதிய இணைப்பு
வைத்தியசாலை நடவடிக்கையில் இருந்து இடை விலகிய வைத்தியர்கள் சிலர் யாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரனின் நடவடிக்கைகளுக்கு பயந்து செயற்படுவதாகவும் கூறியுள்ளார்.
யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையில் தோன்றியுள்ள பெரும் குழப்பநிலைக்கு மத்தியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வாக்குமூலமொன்றை ஊடகங்களுக்கு வழங்கியபோதே இதனை தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ள ஊழல் நடவடிக்கைகள் தொடர்பில் பல்வேறு ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அதனை மனிதஉரிமை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கவும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரான வைத்தியர் அர்ச்சுனா கருத்து தெரிவிக்கையில்,
முதலாம் இணைப்பு
யாழ். சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக தற்போது பதற்றநிலை ஒன்று தோன்றியுள்ளது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் அர்ச்சுனா சுகாதார அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு எதிராக சில தரப்பினரால் அழுத்தங்கள் வழங்கப்படுவதாக அவர் சமூக ஊடக காணொளி ஒன்றின் மூலம் விளக்கியிருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பில் பிரதேச மக்கள் வைத்தியசாலை பணிப்பாளரை சந்திக்க சென்றுள்ள நிலையில் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வைத்திய அத்தியாசகரை பார்ப்பதற்கு பொலிஸார் மறுப்பு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதன்போது வைத்தியசாலைக்கு வருகைதந்த நபரொருவர் கருத்து தெரிவிக்கையில்,
சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் இன்றைய தினம் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக மக்களை திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதாக சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக வைத்திய அத்தியட்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் சில வைத்தியசாலைகளில் நோயாளிகளின் நலன் கருதி சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
இதனால் தென்மராட்சியின் பொது அமைப்புக்கள், நலன் விரும்பிகள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து இன்று முற்பகல் வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த மாகாண சுகாதார பணிப்பாளரை சந்தித்து நிர்வாக பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முதல் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் இல்லையேல் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவிப்பதற்காக வைத்தியசாலை முன்பாக குழுமி இருந்தனர்.
இதனையடுத்து அங்கு வருகைதந்த சாவகச்சேரி பொலிஸார் வைத்தியசாலை முன்பாக குழுமி இருந்தவர்களை அகற்ற முற்பட்டனர்.
இதன்போது அமைதியான முறையில் நாங்கள் மாகாண சுகாதார பணிப்பாளரை சந்தித்து சிகிச்சை நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க கோரிக்கை முன்வைக்கவே எந்தவித இடையூறுகளும் செய்யாமல் இருக்கின்றோம் ஆகவே எம்மை கலைந்து செல்லுமாறு கூற முடியாது என்று தெரிவித்த முன்னாள் நகரசபை உறுப்பினர் கிஷோரை அங்கிருந்த சாவகச்சேரி பொலிஸார் கைது செய்தனர்.
இதனை அடுத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் கனகராஜ் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சாவகச்சேரி வைத்தியசாலைக்கு உடனடியாக விரைந்த மனித உரிமை இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்தி இணைப்பாளர் பொதுமக்களோடும் வைத்தியசாலை நிர்வாகத்தோடும் கலந்துரையாடியதோடு உடனடியாகவே சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு சென்று கைது செய்யப்பட்ட முன்னாள் நகர சபை உறுப்பினரையும் பார்வையிட்டார்.
இதனை அடுத்து சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் கிஷோர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் விடுதிகளில் தங்கி இருந்து சிச்சை பெற்றவர்கள் அனைவரும் வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டதோடு வீடுகளுக்கும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலதிக தகவல் - கஜி
தொடர்புடைய செய்திகள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |









ஒருவழியாக சாதித்து காட்டிய மைனா நந்தினி- மன்னிப்பு கோரிய ஏர் ஏசியா- கடைசியில் என்ன செய்தது? Manithan

மீனா தான் பெஸ்ட், நீ பிச்சைக்கார குடும்பம், ரோஹினியை வெளுத்த விஜயா... சிறகடிக்க ஆசை அதிரடி எபிசோட் Cineulagam
