கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் மீண்டும் மோதல்: பலர் வைத்தியசாலையில் அனுமதி
பொலன்னறுவை - கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.
குறித்த மோதல் சம்பவமானது இன்று(04.02.2024) மாலை ஆறு மணியளவில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன் போது பத்து கைதிகளும் ஒரு இராணுவ வீரரும் காயமடைந்த நிலையில் வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மோதலுக்கான காரணம்
இந்நிலையில் மோதலுக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் சமையல் அறைகள் மற்றும் பல இடங்களில் கைதிகள் சேதம் விளைவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட இரும்பு கம்பிகள், கம்புகள் மற்றும் போதைப்பொருள் கையிருப்பு போன்றவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக வெலிகந்த பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
