இலங்கையில் இசை நிகழ்ச்சியால் ஏற்பட்ட பரபரப்பு
பொலன்னறுவையில் இசை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்து ரசிகர்களை ஏமாற்றிய சம்பவம் தொடர்பில் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.
குறித்த இசை நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு முன்னதாக ஏற்பாட்டாளர்களால் விளம்பரப்படுத்தப்பட்ட கலைஞர்கள் கச்சேரிக்கு பாடல்கள் பாட வராததால், அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் 1,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. பின்னர், அமைப்பாளர்கள் அங்கிருந்து தப்பி ஓடியதால், இசைக்குழுவினர் மக்கள் மத்தியில் சிக்கிக் கொண்டுள்ளனர்.
இசைக்குழுவுக்கு பணம் வழங்கப்படவில்லை, மேலும் நிகழ்ச்சியைத் தொடர ஆதரவு வழங்குமாறு அறிவிப்பாளர்கள் பார்வையாளர்களிடம் கேட்டுகொண்டார். எனினும் அதனை கண்டுக்கொள்ளாத பார்வையாளர்கள் அங்கு குழப்பம் ஏற்படுத்தியுள்ளனர்.
அத்துடன் மேடை மீது ஏறிய பார்வையாளர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிரு்நத நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
