மொரட்டுவ பொலிஸ் நிலையத்திற்கு எதிரில் பதற்ற நிலை: பொலிஸார் விசாரணை
மொரட்டுவ பொலிஸ் நிலையத்திற்கு எதிரில் பதற்ற நிலைமை ஒன்று ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மொரட்டுவ பிரதேசத்தில் தேவாலயமொன்றுக்கு அருகாமையில் சிலர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் பொலிஸார் ஆறு பேரை கைது செய்துள்ளனர்.
நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் எதிர்ப்பு
குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டமைக்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
இந்த எதிர்ப்பு காரணமாக நேற்றைய தினம் இரவு பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் பதற்ற நிலைமை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் விசாரணை
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பது குறித்த தகவல்களை பொலிஸார் இதுவரையில் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தகன்கது.