சர்வதேச போட்டியில் வென்ற பரிசுத்தொகையை பாலஸ்தீனத்திற்கு அளித்த டென்னிஸ் வீராங்கனை
பாலஸ்தீன் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்திருக்கிறது.
இந்த நிலையில், போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு தனது பரிசு தொகையில் ஒரு பாதியை கொடுப்பதாக துனிசியா நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ஓன்ஸ் ஜபியர் அறிவித்துள்ளார்.
டென்னிஸ் போட்டி
மகளிர் டென்னிஸ் சங்க டென்னிஸ் போட்டியின் இறுதி சுற்றில் மார்கெட்டா வோண்ட்ரூசோவாவை வென்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனையவர் கூறியுள்ளார்.
அதாவது, "வெற்றியில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ஆனால் நான் சமீபத்தில் மகிழ்ச்சியாக இல்லை. உலகின் தற்போதைய சூழல்கள் என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கவில்லை.
Ons Jabeur says she’s donating a portion of her prize money to Palestine:
— The Tennis Letter (@TheTennisLetter) November 2, 2023
“I am very happy with the win but I haven't been very happy lately. The situation in the world doesn't make me happy... I feel like… I am sorry. It’s very tough seeing children & babies dying every day.… pic.twitter.com/fVBz9McSjU
பாலஸ்தீனத்தில் ஒவ்வொரு நாளும் குழந்தைகளும், சிறுவர்களும் உயிரிழப்பதை பார்ப்பது கடினமாகவுள்ளது. இது என் இதயத்தை உடைத்துவிட்டது. நான் என்னுடைய பரிசு தொகையில் ஒரு பாதியை பாலஸ்தீனத்திற்கு வழங்க முடிவெடுத்துள்ளேன்.
இது அரசியல் செய்தியல்ல. இந்த உலகம் அமைதியாக இருக்க வேண்டுமென்பதுதான் வேண்டும்" என கண் கலங்கியவாறு கூறியுள்ளார்.