சட்டவிரோத செயலில் ஈடுப்பட்ட பத்து கடற்தொழிலாளர்கள் கைது(Photos)
இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக சட்டவிரோதமாக பீடி இலைகளை இலங்கைக்கு கடத்த முற்பட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் 8 பேர் கட்பிட்டி விஜய கடற்படையினரினால் நேற்று(06.12.2022) மாலைக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கற்பிட்டி விஜய கடற்படையினர் கடலில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டபோது இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இரண்டு இந்தியப் படகுகளை சுற்றிவளைத்த போதே குறித்த கைது இடம்பெற்றுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது இரண்டு படகுகளில் சுமார் 148 உரைப்பைகளில் 4095.5 கிலோ பீடி இலைகள் கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் மற்றும் பீடி இலைகள் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக கற்பிட்டி விஜய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்பின்னர் கைது செய்யப்பட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் 8 பேரும் புத்தளம் நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்டுத்துப்பட்டதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது இம்மாதம் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான்
எஸ்.எம்.சி சதுரசிங்ஹ உத்தரவு பிறப்பித்ததாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம்
இதேவேளை யாழ்.கடலில், சட்டவிரோதமான தங்கூசி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்தமை மற்றும்
கடல் அட்டைகள் பிடித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் இன்றையதினம்(07.12.2022) இருவர்
கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது குருநகர் மற்றும் வெற்றிலைக்கேணி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள், மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களுடன் நீரியல் வள திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நீரியல் வள திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி-கஜிந்தன்

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam

இந்திய போர் விமானங்களை வீழ்த்த பாகிஸ்தான் பயன்படுத்திய J-10C., சீனா வெளியிட்ட ஆவணப்படம் News Lankasri
