தமிழ் மக்களுக்காக முன்வைத்துள்ள பத்து அம்ச கோரிக்கைகள்: நிசாந்தன்

Sri Lanka Army Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lanka Anti-Govt Protest
By Theepan Jul 17, 2022 02:00 PM GMT
Report

அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் செயற்பாட்டிற்கும் அனைத்து தமிழ் கட்சிகளின் பார்வைக்கும் எனும் தொனிப்பொருளில் தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை, தமிழ் மக்களுக்கான  முன்வைத்துள்ள பத்து அம்ச கோரிக்கைகளை தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிசாந்தன் முன்வைத்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று(17) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்

இது தொடர்பில் அவர் முன்வைத்துள்ள கோரிக்கைகளாவது , “இலங்கை அரசினால் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

இலங்கை இராணுவத்தாலும், ஓட்டுக்குழுக்களாளும் கடத்தி காணாமலாக்கப்பட்ட தமிழ் உறவுகள் மற்றும் சிறிலங்கா இராணுவத்திடம் வலிந்து கையளிக்கப்பட்ட எமது போராளிகள், பொதுமக்கள் ஆகியோர் தற்பொழுது எங்கே? அவர்களுக்கு என்ன நடந்தது? என்று நீதியான முறையில் பொறுப்பு கூறவேண்டும்.

தமிழ் மக்களுக்காக  முன்வைத்துள்ள பத்து அம்ச கோரிக்கைகள்: நிசாந்தன் | Ten Point Demands For The Tamil People

பல தசாப்தங்களாக தமிழர்களை அடக்கி, ஒடுக்கும் பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக இல்லாது ஒழிக்கப்பட வேண்டும்.

 அரசினாலும், அரச இயந்திரங்களினாலும் தமிழர் தாயக பகுதியில் திட்டமிட்டு நிகழ்த்தப்படும் பௌத்த மத அடையாளங்களை உருவாக்கும் செயற்பாடுகளை உடனும் நிறுத்துவதோடு நிறுவப்பட்ட பெளத்தமத அடையாளங்களை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழர் தாயகத்தில் உள்ள எமது மக்களின் பூர்வீக காணிகளை சிறிலங்கா அரசு கையகப்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்துவதோடு கையகப்படுத்திய காணிகளை மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டின் ஏனைய மாவட்டங்களை விட வட - கிழக்கில் அதிகமான இராணுவம் நிலைகொண்டுள்ளது. எனவே மேலதிகமாக காணப்படும் இராணுவத்தை எமது பகுதியை விட்டு வெளியேற்றுவதற்கான துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழர் தாயகத்தில் அரசியல், சமூக செயற்பாடுகளை முன்னெடுக்கும் தமிழ் செயற்பாட்டாளர்கள் மீது சிறிலங்கா புலனாய்வாளர்களால் மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்களை உடன் நிறுத்தி செயற்பாட்டாளர்கள் முழு சுதந்திரத்துடனும், பாதுகாப்புடனும் செயற்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஊடகவியலாளர்கள் மீது  இராணுவம் மற்றும் புலனாய்வாளர்களால் மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்கள், தாக்குதல்களை உடன் நிறுத்தி எதிர்காலத்தில் ஊடகவியலாளர்கள் சுயாதீனமாக, சுதந்திரமாக, பாதுகாப்பாக செயற்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

நடவடிக்கைகள் எடுக்க வேண்டுகோள்

வடகிழக்கு தமிழர் பகுதியில் எமது இளைஞர், யுவதிகளுக்கு அதிகமான வேலை வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கு ஏற்றவகையில் பெரியளவிலான தொழிற்சாலைகளை விரைவில் நிறுவுவதற்கான நடவடிக்கைய எடுக்கவேண்டும்.

நீண்ட காலமாக நடாத்தப்படாமல் இருக்கும் மாகாணசபை தேர்தலை உடனடியாக நடாத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேற்படி கோரிக்கைகளை சிறிலங்கா அரசிடம் இருந்து எழுத்து மூலமான உத்தரவை அனைத்து தமிழ் கட்சிகளும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து  அரசின் வாய்மூல உத்தரவுகளை நம்பி ஏமாறும் போக்கிற்கு அனைத்து தமிழ்கட்சியினரும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US