நாட்டில் பத்து லட்சம் பேர் ஆபத்தில்
நாட்டில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தரப்பினர்களில் சுமார் 10 இலட்சம் பேர் இதுவரை பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளவில்லை என சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் நாட்டில் அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்கள் மற்றும் கோவிட் தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 சதவீதத்தாலும், கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 6 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோரே, மருத்துவ சிக்கல்கள் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சின் கோவிட் 19 சம்பந்தமான பிரதான இணைப்பாளர், சுகாதார சேவைகள் தொழில்நுட்பட பிரிவின் பணிப்பாளருமான வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கோவிட் தொற்றால் மரணித்தவர்களில் நான்கில் 3 பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத காரணத்தினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் சுமார் 10 இலட்சம் பேர் இதுவரை பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாமல் ஆபத்தில் இருப்பதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சமித கினிகே தெரிவித்துள்ளார்.





கரூரில் 41 பேர் மரணம்.. 34 மணி நேரத்துக்கு பின் வீட்டை விட்டு வெளியே வந்த விஜய்..எங்கு செல்கிறார்? Cineulagam

மறைந்த ரோபோ ஷங்கர் குடும்பம் பட்ட கஷ்டம்.. மாதம் இவ்வளவு லட்சம் EMI கட்டவேண்டுமா? வெளிவந்த உண்மை Cineulagam
