மீளப் பெறப்படவுள்ள தற்காலிக வற் வரி எண்கள்
முறைமை தவறாகப் பயன்படுத்தப்படுவதைக் கருத்தில் கொண்டு வணிக நோக்கங்களுக்காக இறக்குமதி செய்வதற்கு வழங்கப்படும் தற்காலிக வற் வரி எண்கள் திட்டத்தை, திரும்பப் பெற உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் (IRD) முடிவு செய்துள்ளது.
பொருட்களின் இறக்குமதியில் ஈடுபட்டுள்ள சில வர்த்தகர்கள் வெவ்வேறு பெயர்களில் தற்காலிக இலக்கங்களைப் பெற்று இந்த வசதியை தவறாகப் பயன்படுத்தியமை தெரியவந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரித்திணைக்கள ஆணையர் சேபாலிகா சந்திரசேகர ( Sepalika Chandrasekara ) இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
திருத்தங்கள்
குறித்த முறைகேடுகளால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இறைவரித்திணைக்கள ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.

புறக்கோட்டையில் பணிபுரியும் பாரம் சுமப்போர் மற்றும் கடை உதவியாளர்களின் பெயர்களில் கூட தற்காலிக வற் எண்களைப் பெற்று வரி ஏய்ப்பு செய்தமை தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் தேவையான திருத்தங்கள் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சேபாலிகா சந்திரசேகர கூறியுள்ளார்.
இருப்பினும், மருந்து இறக்குமதிக்கான திருத்தங்கள் அங்கீகரிக்கப்படும் வரை, தற்காலிக வற் எண்கள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்
இதற்கிடையில் தற்காலிக வற் எண்களை வைத்திருப்பவர்கள் நிரந்தர வற் எண்களுக்காக பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், ஏற்கனவே 6,000 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் உள்நாட்டு இறைவரித்திணைக்கள ஆணையர் சேபாலிகா சந்திரசேகர கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற கதறியழும் சாண்ட்ரா... பிக்பாஸ் எடுக்கும் முடிவு என்ன? Manithan
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri
98வது ஆஸ்கர்.. சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் தேர்வாகியுள்ள ஜான்வி கபூரின் 'ஹோம்பவுண்ட்' படம்.. Cineulagam