கிளிநொச்சியில் போக்குவரத்துக்கு தடையாக இருந்த பகுதிக்கு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தினால் தற்காலிக தீர்வு
கிளிநொச்சி - ஊற்றுபுலம் பகுதியில் போக்குவரத்துக்கு தடையாக இருந்த பகுதிக்கு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தினால் தற்காலிக தீர்வு வழங்கப்பட்டுள்ளது.
வள்ளுவர் பண்ணையையும், நாவலர் பண்ணையையும் இணைக்கும் குறித்த ஊற்றுபுலம் பிரதான வீதியில் புதுமுறிப்பு குளத்தின் நீர்மட்டம் அதிகரிப்பு காரணமாக வீதியை குறுக்கறுத்து குளத்து நீர் தேங்கியிருந்தது.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் சம் பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் இன்று கிளிநொச்சி மாவட்ட இடர் முகாமைத்தவ நிலையம் மற்றும் மாவட்ட, பிரதேச செயலகம் ஆகியன பொதுமக்களின் உதவியுடன் போக்குவரத்தினை பாதுகாப்பான முறையில் முன்னெடுக்கக் கூடிய வகையில் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
குறித்த வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு எட்டப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

