வவுனியா குடிவரவு குடியகல்வு திணைக்கள காரியாலயத்துக்கு தற்காலிகமாக பூட்டு
கோவிட் தொற்று காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிராந்திய காரியாலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிராந்திய காரியாலயத்தில் கடமையாற்றும் இரு உத்தியோகத்தர்களுக்கு இன்று (27.01) கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கடவுச் சீட்டு விநியோகம், கடவுச்சீட்டு விண்ணப்பம் பெறுதல் என அனைத்து செயற்பாடுகளும் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டு பிராந்திய காரியாலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளானவர்கள் சிகிச்சைக்காகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுடன்
தொடர்பிலிருந்த உத்தியோகத்தர்களுக்கும் கோவிட் பரிசோதனை மேற்கொள்ளச் சுகாதாரப்
பிரிவினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
சாணக்கிய நீதிப்படி கணவன் மனைவியிடம் மறைத்து வைக்க வேண்டிய 4 முக்கிய விடயங்கள்... என்னென்ன தெரியுமா? Manithan