மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதிக்கு தற்காலிகமாக பூட்டு!
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதி இலக்கம் 02 மறுஅறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன்,அதன் செயற்பாடுகள் முருங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சென்ற ஒருவர் நோயாளர் விடுதி இலக்கம் 02 இல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், குறித்த நோயாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.
இந்நிலையில், நேற்று முதல் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதி இலக்கம் 02 தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அத்துடன், மன்னார் வைத்தியசாலையின் ஊழியர்களுக்கும் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்ச நிலை அங்கு ஏற்பட்டுள்ளதோடு, நோயாளர் விடுதி இலக்கம் 02 இல் பணியாற்றிய உத்தியோகத்தர்கள் மற்றும் விடுதியிலிருந்த நோயாளிகளிடம் பி .சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சுயதனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நோயாளிகளைப் பார்வையிடல் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற காரணங்களுக்கு வருகை தருவதைத் தவிர்க்குமாறு பொது மக்களிடம் வைத்தியசாலை நிர்வாகம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.


அதானி குழுமத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய அமெரிக்கா 7 மணி நேரம் முன்

தன் வெற்றியை விமர்சித்தவர்களுக்கு ஒரு வாரம் கழித்து பதிலடி கொடுத்த அசீம்: என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? Manithan

காலை உணவை சாப்பிடாமல் நேரடியாக மதியம் சாப்பிடுவதால் உடலில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா? News Lankasri

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தாய், தந்தையா இவர்கள்.. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் Cineulagam

வெளிநாட்டில் இருந்து வந்த மாமியார்! சில நாட்களில் உயிரிழந்த மருமகள் மற்றும் இரட்டை குழந்தைகள் News Lankasri
