முல்லைத்தீவில் அரைகுறையாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளில் அல்லல்படும் மக்கள் (Photos)
முல்லைத்தீவில் வீட்டுத்திட்டம் கிடைத்தும் மீதிப்பணம் இடைநிறுத்தப்பட்டுள்ளதால் அரைகுறையாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டில் வாழும் மக்கள் தற்போது பருவமழையினால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
மக்கள் எதிர்நோக்குகின்ற சிரமங்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில்மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்காலத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் சுமார் 1600 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கிவைக்கப்பட்ட போதும் அது வெறும் அத்திவாரத்துடன் நிறுத்தப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றத்தினை தொடர்ந்து அந்த மக்களுக்கான மீதிப்பணம் கிடைக்காத நிலையில் தற்போதும் மக்கள் தற்காலிக கொட்டில்களில் மழைவெள்ளத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள்.

சஜித்தின் வீட்டுத்திட்டம் என மக்களால் சொல்லப்பட்டுவரும் இந்த வீட்டுத்திட்டத்திற்கான பணம் இதுவரை கிடைக்கவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். பல வீடுகள் அத்திவாரம் இடப்பட்ட நிலையிலும் இன்னும் பல வீடுகள் அரைகுறையாக நிர்மாணிக்கப்பட்ட நிலையிலும் காணப்படுகின்றன.
இது தொடர்பில் குறித்த மக்கள் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் அரசாங்கத்தினால் இதுவரையில் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 5 மணி நேரம் முன்
அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்! Manithan
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri