யால மற்றும் உடவலவை தேசிய பூங்காக்களை தற்காலிகமாக மூடுவது தொடர்பில் ஆலோசனை
வறட்சி காரணமாக யால மற்றும் உடவலவை தேசிய பூங்காக்களை தற்காலிகமாக மூடுவது தொடர்பில் இன்று தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் ஏனைய பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
விலங்குகளுக்கான தண்ணீர் மற்றும் உணவு பற்றாக்குறையை கருத்திற்க் கொண்டு பூங்காக்களை மூட வனவிலங்கு அதிகாரிகள் ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளனர்.
நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது
சுமார் மூன்று மாதங்களாக நிலவும் வறட்சியான காலநிலையால் பூங்காக்களுக்குள் உள்ள குளங்கள் மற்றும் நீர்வழிகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு தண்ணீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும், அந்த நடவடிக்கையின் நடைமுறைத்தன்மை குறித்து கவலைகள் எழுந்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri
