டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஆலயங்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பெருமளவான ஆலயங்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லையென பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.முரளீஸ்வரன் தெரிவித்தார்.
அத்தோடு, இது தொடர்பில் அறிவிப்புகள் விடுத்தும் ஆலயத்திலேயே டெங்கு பரவும் சூழலை வைத்திருந்த ஆலயம் ஒன்றிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமய நிறுவனங்கள் சமயம் வளர்ப்பதை மட்டும் குறிக்கோளாக கொண்டிராமல் சமூக நலனுடனும் செயற்படமுன்வருமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
டெங்கு நோயாளர்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கின் தாக்கம் அதிக நிலையில் உள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி,மட்டக்களப்பு,வவுணதீவு பிரதேசத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

வெற்றுக்காணிகளில் இருந்து டெங்கின் தாக்கம் அதிகளவில் ஏற்படுகின்றது.இவற்றினை கட்டுப்படுத்த வெற்றுக்காணி உரிமையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அவ்வாறு வெற்றுக்காணிகளை தூய்மைப்படுத்தாதவர்கள் தொடர்பான தகவல்கள் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்கு வழங்கப்படுமானால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அறிவுறுத்தல்
டெங்கு நுளம்பின் பெருக்கத்தின் தாக்கங்களை கட்டுப்படுத்துவதற்காக ஆலயங்கள்,தேவாலயங்கள்,பள்ளிவாயல்களின் ஊடாக அறிவுப்புகளை செய்யுமாறும் அறிவுறுத்தல்களை வழங்குமாறும் எமது சுகாதார பிரிவினரால் கோரப்பட்டது.

சில ஆலயங்கள் அவற்றினை சிறப்பாக நடைமுறைப்படுத்தின.ஆனால் பல ஆலயங்கள் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை கவனத்தில்கொள்ளாமல் மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்காமல் செயற்படுகின்றது எனத் தெரிவித்துள்ளார்.
ஜனனி-சக்தியை காலி செய்ய தேவசகாயம் போட்ட கொடூரமான பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ரவி-ஸ்ருதிக்கு ஷாக்கிங் விஷயம் கூறிய மீனா, விஜயாவை ஆப் செய்த பெண்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam