புத்தளத்தில் கோவில் திருட்டு: சந்தேகநபருக்கு பொலிஸார் வலைவீச்சு (Photos)
புத்தளம்- உடப்பு ஸ்ரீ விரபாத காளி அம்மன் ஆலயத்தினுள் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் உண்டியலில் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் நேற்றையதினம் (14.07.2023) பதிவாகியுள்ளது.
12 பவுனுக்கும் அதிகமான பெறுமதியான தங்க நகைகளும் உட்பட மொத்தமாக 25 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சந்தேக நபர் உண்டியலை உடைத்து அதிலிருந்த பெருந்தொகை பணத்தை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கோவிலின் ஒருபுறத்தில் உள்ள சிறிய வாயிலின் சாவியை உடைத்துக்கொண்டு முகத்தை மூடிய நபர் ஒருவர் கோவிலுக்குள் நுழைவது சிசிடிவி கமெராவில் பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது.
பதற்றத்தில் பக்தர்கள்
உடப்பு ஸ்ரீ வீரபத்திர காளி அம்மன் ஆலயம் உடப்பு கடற்கரைக்கு அருகாமையில் அமைந்துள்ளதுடன் பழைய ஆலயம் முற்றாக புனரமைக்கப்பட்டு மூன்று வருடங்களுக்கு முன்னர் திறக்கப்பட்டது.
இந்த கோவிலுக்கு அதிகளவான மக்கள் தமது பிரச்சினைகளில் இருந்து தஞ்சம் புகுவதற்கு வழமையாக வந்து செல்வதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் உடப்பு வாசிகள் தற்போது கனடா, சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவிக்கபடுகின்றது.
இந்த திருட்டால் காளி கோவில் பக்தர்கள் கடும் பதற்றத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸார், தடவியல் பொலிஸார் மற்றும் மேலதிக
விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர்.