புத்தாண்டு தின அருள்மிகு ஆதிவிநாயகர் திருக்கோவில் தேர்த் திருவிழா (Photos)
புத்தாண்டு தினத்தில் வவுனியா, வைரவபுளியங்குளத்தில் எழுந்தருளியிருக்கும் ஆதிவிநாயகர் திருக்கோவில் தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு புத்தாண்டு வழிபாட்டிலும் தேர்திருவிழா வழிபாட்டிலும் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியாவில் உள்ள முக்கிய திருத்தலங்களில் ஒன்றாகிய வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் திருக்கோவிலின் மகோற்சவப் பெருவிழா கடந்த 6 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளது.
மகோற்சவப் பெருவிழாவின் 9 ஆம் நாளான இன்று (14.04) தேர்த் திருவிழா மகோற்சவ பிரதம குரு சிவசிறி மயூரக் குருக்கள் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
புத்தாண்டு தினத்தில் இத் தேர் திருவிழா இடம்பெற்றமையால் வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்த அடியவர்கள் விநாயகப் பெருமானை வழிபட்டதுடன், தமக்குள் புத்தாண்டு வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.












