மர்மமாக உயிரிழந்த மாணவியின் உடலில் ஏற்பட்டுள்ள காயங்கள்: பொலிஸார் வெளியிட்ட தகவல்
களுத்துறையில் உள்ள விடுதி ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே தள்ளப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்படும் 16 வயதுடைய பாடசாலை மாணவியை அழைந்து வந்த வாகனம் களுத்துறை, பலதொட்ட பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த மாணவியுடன் விடுதிக்கு சென்றதாக கூறப்படும் இளைஞனும் யுவதியும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிரேத பரிசோதனை
களுத்துறை நாகொட பொது வைத்தியசாலையில் உதவி சட்ட வைத்திய அதிகாரி டி.கே.வேணுரஜித் தலைமையில் மாணவியின் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவரது உடல் உறுப்புகள் மற்றும் இரத்த மாதிரிகள் மரண விசாரணை அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிறுமியின் உடலில் பல இடங்களில் பற்களின் அடையாளங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

உயிரிழந்த மாணவியுடன் தங்குவதற்கு வந்ததாகக் கூறப்படும் 29 வயதுடைய இளைஞன் திருமணமானவர் எனவும் பெரும் நிதி நிறுவனம் ஒன்றில் பணம் செலுத்துவதற்கு கடினமான வாகனங்களை கைப்பற்றும் பணியில் ஈடுபடுபவர் எனவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரை கைது செய்வதற்கு இரண்டு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் துமிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan