கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்
கொழும்பின் புறநகர் பகுதியான மாதம்பே பிரதேசத்தில் பெற்றோரின் பாதுகாப்பில் இருந்த 15 வயது பாடசாலை மாணவியை கடத்த உதவிய உதவிய குற்றச்சாட்டில் 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர் மாதம்பே கலஹிடியாவைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சிறிய லொறியும் பொலிஸாரின் காவலில் எடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவி
கடத்தப்பட்ட சிறுமி 10 ஆம் வகுப்பு மாணவி எனவும் 18 ஆம் திகதி காலை பாடசாலையில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறினார்.

ஆனாலும் குறித்த மாணவி, பாடசாலையில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்ளவில்லை என்பதை அவரது தாயார் அறிந்துள்ளார்.
அந்த சிறுமி மாதம்பே, பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞனுடன் காதல் உறவில் இருந்ததாகவும், அந்த இளைஞனையும் தற்போது காணவில்லை எனவும் காணாமல் போன சிறுமியின் தாயார் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 14 மணி நேரம் முன்
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து தாரா சொன்ன விஷயம், அதிர்ச்சியில் நந்தினி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam