சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களின் உறவினர்கள் கண்ணீருடன் கண்டன போராட்டம்
எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ள 30 ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி அவர்களது உறவினர்கள் கண்ணீருடன் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டமானது ராமேஸ்வரம் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகம் முன்பாக இடம்பெற்றுள்ளது.
அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கண்டன போராட்டம்
ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து கடந்த புதன்கிழமை(8) காலை 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2000 மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலுக்கு சென்றனர்.
கடற்றொழிலாளர்கள் அன்றிரவு தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே கடற்றொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டதாக 4 விசைப்படகுகளையும் அதிலிருந்த 30 கடற்றொழிலாளர்களை கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி வவுனியா சிறையில் அடைத்துள்ளனர்.
கடற்றொழிலாளர்களின் இந்த கைது நடவடிக்கை கண்டித்தும் இலங்கை சிறையில் உள்ள 30 கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி நேற்று(10) ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் கடற்றொழிலாளர்கள் நடத்திய அவசர ஆலோசனை கூட்டத்தில் இன்று முதல் ராமேஸ்வரம் விசைப்படகு கடற்றொழிலாளர்கள் தொடர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோரிக்கை
அத்தோடு, போராட்டத்தில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
மேலும் இலங்கை சிறையில் உள்ள கடற்றொழிலாளர்கள் உடனடியாக படகுடன் மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை வைத்து கண்டன போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதனிடையே கண்டன போராட்டத்தில் ஈடுபட்ட சிறையில் உள்ள கடற்றொழிலாளரின் மனைவி மஞ்சு போராட்டம் நடந்த இடத்தில் திடீரென மயக்கமடைந்து விழுந்ததால் அங்கு பதற்றம் நிலவியமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

சற்றுமுன் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆன போட்டியாளர்! முதல் வாரத்திலேயே அதிர்ச்சி Cineulagam
