வலியை உணரக்கூடிய "எலக்ட்ரானிக் தோலை" உருவாக்கி இந்திய வம்சாவளி பொறியாளரின் குழு சாதனை
இங்கிலாந்தில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொறியாளர் ரவீந்தர் எஸ் தஹியா தலைமையிலான பொறியாளர்கள் குழு "வலியை" உணரக்கூடிய எலக்ட்ரானிக் தோலை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொறியாளர் ரவீந்தர் எஸ் தஹியா கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் ஜேம்ஸ் வாட் பொறியியல் பள்ளியின் பேராசிரியராக உள்ள நிலையில், இந்த சாதனையை படைத்துள்ளார்.
எலக்ட்ரானிக் தோலின் பயன்கள்
இது குறித்து ரவீந்தர் எஸ் தஹியா கூறுகையில், "இந்த கண்டுபிடிப்பு மனிதனைப் போன்ற உணர்திறன் கொண்ட புதிய தலைமுறை ஸ்மார்ட் ரோபோக்களை உருவாக்க உதவும். மூளையில் இருந்து வரும் சமிக்ஞைகளுக்கு பதிலளிக்கக்கூடிய பெரிய அளவிலான மின்-தோலை உருவாக்குவதற்கு இது முன்மாதிரியாக இருக்கும்.
A new type of electronic skin capable of feeling 'pain' could help create a new generation of smart robots and prosthetics.
— University of Glasgow (@UofGlasgow) June 2, 2022
The skin was developed by @RavinderSDahiya and his @BEST_UofG group at @UofGEngineering.
Read the full story here ? https://t.co/EE94KiwgNH pic.twitter.com/LRlHUZzEsL
வலி போன்ற எதிர்பாராத தூண்டுதல்களுக்கு நாம் அனைவரும் நம் வாழ்வின் ஆரம்பத்திலேயே பழகிக்கொள்கிறோம். எலக்ட்ரானிக் தோலின் இந்த புதிய வடிவத்தின் வளர்ச்சி உண்மையில் நமக்குத் தெரிந்த அளவிற்கு வலியை ஏற்படுத்தாது. ஆனால் இது வெளிப்புற தூண்டுதலிலிருந்து கற்றல் செயல்முறையை விளக்குவதற்கான சுருக்கமான வழியாக இது கருதப்படுகிறது" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.