பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்: கல்வி அமைச்சு அறிவித்தல்
ஆசிரிய சேவைக்குப் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
களுத்துறையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்படி, விஞ்ஞானம், தொழிநுட்பம், ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் ஆகிய பாடங்களுக்கு புதிய பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தின் தடை உத்தரவு
மேலும், புதிய பட்டதாரிகளை இணைத்துக்கொள்வது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நீதிமன்றத்தின் தடை உத்தரவு காரணமாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை இணைப்பது தாமதமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
