போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள்! ஆளுநர் வழங்கியுள்ள உறுதிமொழி

Northern Province of Sri Lanka Teachers Nagalingam Vedanayagam
By Kajinthan Sep 09, 2025 05:58 AM GMT
Report

வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் சிங்கள் மொழி மூல கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள், வடக்கின் ஆளுநரும் தமக்கான தீர்வை வழங்க பின்னடிக்கின்றார் என குற்றம் சாட்டிய நிலையில் குறித்த பிரச்சினைக்கு ஜனவரி மாதத்துக்குள் தீர்வு தருவதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார்.

கொழும்பு, ஹம்பகா, காலி, களுத்துறை என பல வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 40 இற்கும் அதிகமான வடக்கு மாகாணாத்தில் உள்ள பாடசாலைகளில் சிங்கள் மொழி மூல கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் தமது இடமாற்றம் தொடர்பில் கரிசனை செலுத்துமாறு வடக்கின் ஆழுநரிடம் இன்றையதினம் (8) கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன்போது, தொழில் மற்றும் தமது வாழ்க்கை நிலைகுறித்து மொனிக்கா பிரயங்கனி வீரக்கோன் என்ற ஆசிரியர் கருத்து கூறுகையில், 8 ஆண்டுகள் நியமனத்தின் பின் இடமாற்றன் என்ற ஒப்பந்தத்தின் பிரகாரமே நாம் வடக்கின் குறிப்பாக வவுனியா முல்லைத்தீவு போன்ற மாவடங்களில் உள்ள சிங்கள மொழி மூல படசலைகளுக்கு நியமனம் பெற்று சென்றிருந்தோம்.

ராஜிதவிற்கு பிணை

ராஜிதவிற்கு பிணை

இடமாற்றம்

ஆனால் இன்று 12 வருடங்களுக்கும் மேலாக சேவைக்காலம் முடிந்துவிட்டது. நாம் எமது இடமாற்றம் குறித்து கோரிக்கைகளை சமர்ப்பித்து அது கிடைத்தும் குறிப்பாக அதிபர் எம்மை விடுவித்தும் வலயக் கல்வி அதிகாரிகள் தடுத்து வருகின்றனர்.

இதனால் நாம் பல்வேறு இடர்பாடுகளை நாளாந்தம் எதிர்கொள்ள நேரிடுகின்றது. இதே நேரம் தமிழ் மக்கள் வாழ்வியல் போன்று எமது வாழ்வியல் இல்லை. இதனால் குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகள் உருவாகிவருகின்றது.

போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள்! ஆளுநர் வழங்கியுள்ள உறுதிமொழி | Teachers Who Joined Protest Governor Confirms

இவ்வாறு இடமாற்றம் கிடையாத விரக்தி ஒருபுறம் இருக்க குடும்பத்தில் பிரச்சினை மறுபுறம் உருவானதால் ஹம்பகா மடுகங்கந்த தேசிய பாடசாலை ஆசிரியர் தற்கொலை செய்திருந்தார்.

இதேபோன்று பல ஆசிரியர்கள் கணவர்களால் விவாகரத்துக் கோரும் நிலைக்குள் சென்று நீதிமன்றுடன், வாழ்வை மீட்க நாளாந்தம் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

எமது வாழ்வியல் நிலையை அதிகாரிகள் உணருவதாக இல்லை. இன்று காலை ஆளுனரை சந்திக்க வந்த அனைவரும் வடக்கின் பல படசாலைகளில் 12 வருடங்களுக்கு மேலாக சேவையில் ஈடுபட்டு வருகின்றவர்கள்.

விடுதியொன்றுக்குள் சிக்கிய பெண்கள் - சுற்றிவளைத்த பொலிஸார்

விடுதியொன்றுக்குள் சிக்கிய பெண்கள் - சுற்றிவளைத்த பொலிஸார்

தீர்வு

வடக்கு கிழக்கின் ஆசிரியர் இடமாற்ற கோவையின் பிரகாரம் தாம் சேவையை குறித்த மாவட்டங்களில் நிறைவு செய்தும் இதுவரை இடமாற்றங்கள் அவர்களுக்கு கிடைக்கப்பெறபில்லை.

கடந்த அரசின் அதிகாரிகளிடம் தமது நிலைமைகளை எடுத்துக் கூறியும் தீர்வுகள் எதுவும் வழங்கப்படாத விரக்தியுடன் இன்று ஆளுனரிடம் வந்துள்ளோம். அவரும் எம்மை முழுமையாக சந்திக்காது மூவரை அழைத்து பேச்சு நடத்துகின்றார்.

போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள்! ஆளுநர் வழங்கியுள்ள உறுதிமொழி | Teachers Who Joined Protest Governor Confirms

எனவே எமக்கான தீர்வு வழங்கப்படுவதை உறுதி செய்யும் வரை நாம் எம்மாலான முயற்சிகளை செய்யவுள்ளோம் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய ஆளுநர் வெற்றிடங்களுக்கு ஏற்ப விண்ணப்பங்கள் கோரப்பட்டு ஜனவரி மாதத்துக்குள் தீர்வை வழங்குவதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே குறித்த ஆசிரியர்கள் வடக்கின் கல்வி அமைச்சின் செயலாளர் அலுவலகம் சென்று அங்கும் தமது பிரச்சினைகளை கூறி கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விடுதியொன்றுக்குள் சிக்கிய பெண்கள் - சுற்றிவளைத்த பொலிஸார்

விடுதியொன்றுக்குள் சிக்கிய பெண்கள் - சுற்றிவளைத்த பொலிஸார்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US