ஆசிரியர்களுக்கான ஓய்வு திட்டம் தொடர்பில் கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு
பாடசாலைகளில் சாதாரண தரம் (O/L) மற்றும் உயர்தர (A/L) வகுப்புகளுக்கான மாணவர்கள் பற்றாக்குறை காரணத்தினால் அனைத்து ஆசிரியர்களும் ஐந்து வருடங்களின் பின்னர் விருப்ப ஓய்வு திட்டத்தை (Voluntary Retirement Scheme) அனுபவிக்க முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நடத்தாண்டிய தம்மிஸ்ஸர கல்லூரியில்(Natathandiya Dhammissara College) புதிய மூன்று மாடி தொழில்நுட்ப பீட கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
விருப்ப ஓய்வு திட்டம்
இதேவேளை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடாமல் பாடசாலை நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,"பாடசாலைகளில் உள்ள பிரச்சினையுடன், மாணவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு க.பொ.த மற்றும் உயர்தர வகுப்புகளுக்குள் நுழைய மாட்டார்கள்.
ஏனெனில் பிரச்சினைகளுடன் அரசாங்க பாடசாலைகளில் இருந்து தேவையான அறிவைக் பெற்றுக்கொள்ள முடியாது.
மாணவர்கள் எப்பொழுதும் பரீட்சைகளில் தேர்ச்சி பெற வேண்டும் என்றே எண்ணுவார்கள் அதற்கான அறிவைக் கண்டறிந்து பரீட்சைகளில் தேர்ச்சி பெற பல்வேறு வழிகள் உள்ளன.
மாற்று வழிகள்
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை மாணவர்கள் காத்திருக்கமாட்டார்கள்.
மாணவர்கள் அரசு பாடசாலைகளை விட்டு வெளியேறி, தனியார் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேருவது போன்ற மாற்று வழிகளைக் கண்டுபிடிப்பார்கள்.
மேலும் சில மாணவர்கள் வெளிநாட்டு பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேரலாம்" என்று அமைச்சர் கூறியுள்ளார்.