இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைத்தலைவர் மீது தாக்குதல்
எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை தலைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கல்குடா வலயக் கல்வி பிரதி பணிப்பாளருக்கும் இலங்கை ஆசிரியர் சங்க தலைவருக்கும் இடையிலேயே நேற்று(20) இவ்வாறு மோதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி ஊடாக வீடியோ
மட்டக்களப்பு - திருகோணமலை வீதி தாண்டவன்வெளி சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அரச திணைக்களங்களைச் சேர்ந்தவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட அட்டை முறையில் பெட்ரோல் விநியோகம் இடம்பெற்று வந்துள்ளது.
இதன்போது வலயக்கல்வி பணிப்பாளர் வாகனத்துக்கு எரிபொருளை நிரப்பிக் கொண்டிருந்தபோது அதனை ஆசிரியர் சங்க தலைவர் தனது கையடக்க தொலைபேசி ஊடாக வீடியோ எடுத்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி
இதனையடுத்து இது தொடர்பாக தனது கணவரான கல்குடா வலயக் கல்வி பிரதி பணிப்பாளரிடம் அவர் தெரிவித்துள்ளார்.
உடனடியாக எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு வந்த அவரது கணவர் இலங்கை ஆசிரியர் சங்க தலைவருடன் ஏன் எனது
மனைவியின் வாகனத்தை வீடியோ எடுத்ததாக கேட்டுள்ளார்.
இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதையடுத்து இலங்கை ஆசிரியர் சங்க தலைவர் மீது வலயக்கல்வி பணிப்பாளரின் கணவர் தாக்குதலை மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலை மேற்கொண்டவரை கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

திருமணமான 4வது நாளில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட புதுப்பெண்! மற்றொரு அதிர்ச்சி சம்பவம் News Lankasri

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri

கேம் சேஞ்சர் ஓடாதுனு முன்பே தெரியும்.. மிகப்பெரிய நஷ்டம்: ஷங்கரை தாக்கிய தயாரிப்பாளர் தில் ராஜு Cineulagam
