துணுக்காய் வலயத்திற்கு உட்பட்ட ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை
முல்லைத்தீவு - துணுக்காய் வலயத்திற்கு உட்பட்ட ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லை கல்வி வலயத்தினை சேர்ந்த ஆசிரியர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை கடந்த வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெறுகின்றது.
இதுவரை 1118 ஆசிரியர்களுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை புதுக்குடியிருப்பு பிரதேசத்திலும் முதியவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கோவிட் தொற்றுக்கு இலக்காகியவர்களில் 49 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் 135 குடும்பங்களைச் சேர்ந்த 333 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.








தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
