ஆசிரிய இடமாற்ற சபையைக் கலைத்தமை ஜனநாயக விரோத செயல்: இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்
தேசிய ஆசிரிய இடமாற்ற சபையைக் கலைத்தமை ஜனநாயகத்திற்கு விரோதமானது எனக்கோரி ஜனாதிபதியிடம் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அனுப்பிய கடிதத்திலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக் கடிதத்தில், தேசிய ரீதியில் நடைபெறுகின்ற ஆசிரிய இடமாற்றங்களில் பல்வேறு குறைப்பாடுகள் மோசடிகள் நடைபெறுவது தொடர்பில் கடந்த காலங்களில் நாம் கல்வி அமைச்சிடம் முறைப்பாடுகளை முன்வைத்திருந்தோம்.
அவை எவற்றிற்குமே எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

லஞ்சம் பெறுவது அதிகரிப்பு
தேசிய ஆசிரிய இடமாற்றக் கொள்கைக்கு மாறாக ஆசிரிய இடமாற்றங்கள் நடைபெறுவதும், அதைக் கருப்பொருளாக வைத்து பலர் லஞ்சம் பெறுவதும் அதிகரித்துள்ளன.
சிலர் இதன் மூலம் லட்சக்கணக்கான பணத்தை ஆசிரியர்களிடம் பெற்றமை எம்மால் நிரூபிக்க முடியும்.
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் எந்தவொரு சபை உறுப்பினரும் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரம் இருக்குமானால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கையை முதலில் நாம் எடுப்போம்.

ஆனால் எமது சங்கத்தில் அது போன்ற லஞ்சம் பெறும் உறுப்பினர்கள் எவரும் இல்லை என்பதனை உறுதியாக கூற முடியும்.
சுயாதீனமாகவும் தூய்மையாகவும் நடைபெற வேண்டும்
இதுபோன்ற லஞ்சம் பெறும் குற்றவாளிகளைக் கட்டுப்படுத்துவதை விட்டுவிட்டு இடமாற்ற சபையைக் கலைப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது.
இதனால் பாதிக்கப்படுவது ஆசிரியர்கள் மட்டுமன்றி மாணவர்களுமே.

எனவே தயவு செய்து தாங்கள் எடுத்துள்ள முடிவை மாற்றி ஆசிரிய இடமாற்ற சபையானது சுயாதீனமாகவும் தூய்மையாகவும் நடைபெற ஆவன செய்யுங்கள்.
கல்வியில் இடையூறுகள் ஏற்படுவது மாணவர் கல்வியை மட்டுமல்லாது ஆசிரியர்களின்
மனங்களையும் புண்படுத்தும் என இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஒப்பந்தத்தை மறுத்தால் ஜெலென்ஸ்கி கொல்லப்படலாம்... ரஷ்யாவில் இருந்து கசிந்த தகவல் News Lankasri
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri