இரண்டாவது நாளாகவும் தொடரும் ஆசிரியர் போராட்டம்
இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று(14) இரண்டாவது நாளாகவும் வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இன்றைய போராட்டத்தை வலுப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிவஞானம் ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து போராட்டக்காரர்களுடன் கலந்துரைதாடியுள்ளனர்.
முன்பதாக ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப் படுத்துமாறும் , தற்போது உள்ள ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் தலையீடு மற்றும் பழிவாங்கல் காணப்படுவதுடன் அரசாங்கத்தின் கீழ் சில அதிகாரிகள் அவர்களின் சுயலாபத்துக்காக செயற்படுவதை நிறுத்துமாறும் கோரியே தாம் போராட்டத்தில் இறங்கியுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.







