பாடசாலை மாணவனுக்கு ஆசிரியரால் நேர்ந்த கொடுமை
அனுராதபுரத்தில் முன்னணி பாடசாலை ஆசிரியர் ஒருவர் கணித ஆய்வகத்தில் 12 வயது மாணவனை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, அனுராதபுர பொலிஸ் தலைமையகத்தின் பாடசாலை மற்றும் மகளிர் பணியகத்தால் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவரை அனுராதபுர தலைமை நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய, அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
விளக்க மறியல்
திரப்பன அத்துங்கமையில் வசிக்கும் திருமணமான ஆசிரியர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
12 வயது சிறுவனின் பெற்றோர் இந்த சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளனர்.
சந்தேகநபரான ஆசிரியர் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் ரஞ்சித் ராஜகருணா, தனது கட்சிக்காரர் மீதான குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
பிணை நிபந்தனை
அதன்படி, எந்தவொரு பிணை நிபந்தனைகளின் அடிப்படையிலும் அவரை விடுவிக்குமாறு வழக்கறிஞர் நீதிமன்றத்தைக் கோரினார்.
எனினும் முன்வைக்கப்பட்ட தகவல்களை கருத்தில் கொண்டு, நீதிமன்றம் சந்தேக நபரை 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.





துளியளவும் பந்தா இல்லாமல் விசேஷத்தை கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர் Manithan
